விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் யூனியன் நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள தொட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ள ஊழியர்கள் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் விரைந்துவந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் பள்ளியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா, தாசில்தார் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி முருகன், யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன் கற்பகவல்லி என அதிகாரிகள் பலரும் விசாரணை நடத்தினார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“