சென்னையில் பைக்கில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள கருணாநிதி 3ஆவது தெருவில் வசித்து வந்தவர் பிரவீன். 20 வயதான இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இவரது பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர்கள் இருவரும் தரமணி 100 அடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் (பைக்) சென்றனர்.
அப்போது, பைக்-ஐ பிரவீன் ஓட்டினார். ஹரிஹரன் பின்னால் அமர்ந்து இருந்தார். இருவரும் பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
இதனை பின்னால் இருந்த ஹரிஹரன் வீடியோ எடுத்துள்ளார். பைக் 113-114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென பைக் விபத்தில் சிக்கியது.
அதாவது குறுக்கே லோடு வேன் வர, பிரவீன் பிரேக் பிடித்துள்ளார். இதில் வண்டி லோடு வேன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சிறிது தூரம் வண்டியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அவர்கள் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்தக் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
இந்த விபத்து தொடர்பாக லோடு வேன் டிரைவர் குணசேகரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil