Advertisment

அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்: 6 மாதமாக வேலூர் சி.எம்.சி சிகிச்சையில் இருந்தவர்

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் - சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
durai dayanidhi

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக  சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர், முதல்வர் மு.க ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில், துரை தயாநிதிக்கு கடந்த டிசம்பர் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்து அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,  துரை தயாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment