Advertisment

துரை தயாநிதி உடல்நிலை இப்போ எப்படி இருக்கு? வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை விளக்கம்

இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது

author-image
WebDesk
New Update
durai dayanidhi

Durai Dayanithi

துரை தயாநிதி உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி(36). இவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த தயாநிதி, கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதியை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அங்கு 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது
இதனிடையே துரை தயாநிதி உடல் நலம் குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது
இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 
அதில், "துரை தயாநிதி நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment