தி.மு.க மாணவர் அணி செயலாளராக இருந்த சி.வி.எம்.பி. எழிலரசன் தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க மாணவர் அணித்தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தி.மு.க மாணவர் அணிச் செயலாளராக நியமனமித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊடகங்களில் தி.மு.க. சார்பில் பேசுவதற்காக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் செல்வகணபதி, கே.என். அருண்நேரு, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் தி.மு.க. சார்பில் விவாதங்களில் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.