100 நாள் வேலைப் பற்றாக்குறை: ககன் தீப் சிங் பேடியை சந்தித்து துரை. ரவிக்குமார் எம்.பி. மனு

விழுப்புரம் மாவட்டத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1.79 கோடி மனித சக்தி நாட்கள், இந்த ஆண்டு 81 லட்சமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலமற்ற விவசாயக் கூலிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதை துரை. ரவிக்குமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 1.79 கோடி மனித சக்தி நாட்கள், இந்த ஆண்டு 81 லட்சமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் நிலமற்ற விவசாயக் கூலிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதை துரை. ரவிக்குமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

author-image
WebDesk
New Update
VCK MLA Sinthanai Selvan meeting

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 100 நாள் வேலை ஒதுக்கீடு கோரி துரை. ரவிக்குமார் எம்.பி. மனு

விழுப்புரம் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) கூடுதல் மனித சக்தி நாட்கள் (Man-days) ஒதுக்க வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி அவர்களிடம் நேரில் வலியுறுத்தினார். சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் துரை. ரவிக்குமார் எம்.பி., செயலரைச் சந்தித்து இதுதொடர்பான கோரிக்கைக் கடிதத்தை அளித்தார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டத்துக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 1.79 கோடி மனித சக்தி நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 81 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டுக் குறைப்பால், நிலமற்ற விவசாயக் கூலிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்பதைச் சுட்டிக்காட்டிய துரை. ரவிக்குமார், விழுப்புரம் மாவட்டத்துக்குக் கூடுதல் மனித சக்தி நாட்களை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழல் குறித்தும் அவர் செயலரிடம் எடுத்துரைத்து, அந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார். இச்சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், விழுப்புரம்

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: