/indian-express-tamil/media/media_files/2024/12/24/Re0m57qVR3qwLJ5ly0Su.jpg)
"200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும்" என்று துரை வைகோ எம்.பி கூறினார்.
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ தெரிவித்ததாவது:-
பெரியார் இறந்து காலம் கடந்தும் அவருக்கு எதிர்ப்பு காரணம் என்ன கேள்விக்கு தந்தை பெரியார் இல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்களுக்கு கல்வி, உரிமை பொருளாதாரம் முன்னேற்றம் அவரால் வந்தது. இன்றும் சில சக்திகள் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என தவறான கருத்துக்களை கூறுவதற்கு சிலர் இருக்கின்றனர்.
பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெத்துக்கு பாஸ் கொடுத்தது பெரியார் தான்.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எனவேதான், 4 வருடத்திற்கு முன்னே பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன், காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களுக்கு உரிய நிதியை விடுவிப்பேன் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எங்களிடம் நேரடியாகவே நிர்பந்தம் செய்தார்.
ஆனால், நாங்களோ இரு மொழிக் கொள்கை என்பது திராவிடக் கொள்கையின் பிரதானமான கொள்கை. இதன் காரணமாகத்தான் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்று உலகமெங்கும் கோலோச்சுகின்றனர்.
தி.மு.க கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது.
ஏனென்றால், மக்கள் தி.மு.க பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும். அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us