scorecardresearch

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், வி.ஹெச்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை? துரை வைகோ கேள்வி

தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamil news
Tamil news updates

திருச்சி திருவானைக்காவில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் மாமனிதன் வைகோ என்ற திரைப்படத்தை வெளியிட்ட ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: ம.தி.மு.க நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மாமனிதன் வைகோ படம் இன்று திருச்சியில் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று கோவையிலும் அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி ஒளிபரப்பப்பட்டது. தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால், பா.ஜ.க-வுடன் தொடர்புள்ள ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அண்ணன் தம்பிகளாக பழகும் இந்து முஸ்லிம்களிடம் வேற்றுமையை உருவாக்கி வாக்கு வங்கியை நிரப்ப சில சக்திகள் முயற்சிக்கிறார்கள். அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. அடிப்படை தேவைகளைப் பற்றி பேசாமல் ஜாதி மத அடிப்படையில் அரசியல் நடக்கிறது. பொதுமக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஓசி பேருந்தில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்ற அமைச்சர் பொன்முடியின் பேச்சு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, அவர் சொன்ன கருத்து தவறான விதத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற அண்ணாமலையின் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, அவதூறு அண்ணாமலை நிறைய கருத்துக்கள் சொல்லி வருகிறார். இங்கு மதக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இது போன்ற கருத்துக்கள் அவர் சொல்வதின் நோக்கம் என்ன?” ஒரு ஐ.பி.எஸ் படித்த நபர் இது போன்ற கருத்துக்கள் சொல்வது மிகவும் கேவலமானது என்று தெரிவித்தார்.

திருச்சியில் திருவானைக்காவில்ல் வெங்கடேஷ்வரா, திருச்சி ஜங்சன் சோனா மீனா உள்ளிட்ட திரையரங்குகளில் இன்று மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் டாக்டர் ரொஹையா முகமது, சேரன், சோமு உள்ளிட்ட மதிமுக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் திருச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durai vaiko questions central govt why didnt take action against rss bajrangdal vhp