scorecardresearch

ஆளுனரா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சார பீரங்கியா? தேர்தலில் பணம் கொடுப்பது ஜனநாயக விரோதம்.. துரை வைகோ

தேர்தலில் பணம் கொடுப்பது ஜனநாயக விரோதம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Durai Vaiko said that giving money in elections is anti-democratic
திருச்சியில் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு

மதிமுக நிர்வாகி ரயில்வே ஊழியர் செழியன் பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்ள மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ திருச்சி வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு ஆளுனர் ரவி, திராவிட சித்தாந்தங்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அரசியலை கடந்து மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்தவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு ஆளுநர்க்கான அடிப்படை கடமைகள் கூட தெரியாமல் செயல்பட்டு வருகிறார்.

தேவையில்லாமல் அரசியல் பற்றிய கருத்துக்களையும், திராவிட சித்தாந்தங்கள் பற்றிய கருத்துக்களையும் பேசி, ஆர். எஸ். எஸ். அமைப்பின் அறிவிக்கப்படாத பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார்.
தேர்தலில், பணம் கொடுக்கக் கூடாது, என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். யார் பணம் கொடுத்தாலும், மக்கள் முடிவு எடுத்து விட்டால் அதை மாற்றும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை.

தேர்தலுக்காக, பணம் கொடுத்தவர்களில் பலர் தோற்றுள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் தான் ஈரோடு இடைத்தேர்தலில், எழுந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணுவ வீரராக இருப்பவர் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டியவர். ஆனால், எங்களுக்கு சுடத் தெரியும், குண்டு வைக்கத் தெரியும் பகிரங்கமாக சொன்னவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

வன்முறை துாண்டும் வகையில் பேசிய அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மதிமுக பிரமுகர்கள் சேரன், மணவை தமிழ் மாணிக்கம், டாக்டர் ரொகையா, சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durai vaiko said that giving money in elections is anti democratic

Best of Express