தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் எம்.பியுமான கதிர் ஆனந்த்தின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் அமலாக்கத் துறை சோதனை திடீர் சோதனை நடைபெற்றது.
வேலூர் காட்பாடியில் உள்ள அவர்களது வீடு, கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள், வங்கி ஆவணங்களை அமலாக்கத் துறை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனைக்கு இடையே அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.
நேற்றிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய துரைமுருகன், 'என்னுடைய இலாகா சம்பந்தமாக டெல்லி சென்று வருகிறேன். நீங்கள் எழுதி இருக்கும் கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. அதற்கும் எனக்கும் சம்மதம் இல்லை. அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனது தான்''என்றார்.