பிரதமர் நரேந்திர மோடி ஏ.பி.பி என்ற செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க நபர் என்றும், ஆனால், இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அவரது அங்கீகாரம் குறைவு என்றும் மோடி வலியுறுத்தினார். கடந்த 75 ஆண்டுகளில் காந்தியின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்துவது தேசத்தின் கடமையல்லவா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “மகாத்மா காந்தி உலகில் ஒரு சிறந்த ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகுக்குத் தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள், ஆனால், அவரைப் பற்றி உலகில் முதன்முதலில் ஆர்வம் ஏற்பட்டது ‘காந்தி’ படம் உருவானபோதுதான். நாம் அதை செய்யவில்லை.” என்று கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒரு பிரதமர், மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்கும் தெரியாது, காந்தி படம் உருவானபோதுதான், அவரைப் பற்றி உலகத்தில் முதன் முதலில் ஆர்வம் ஏற்பட்டது என்ற பிரதமரின் கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர்.
ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய இந்தியா-யுகே கூட்டுத் தயாரிப்பான ‘காந்தி’ திரைப்படம் நவம்பர் 30, 1982-ல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது, அதே ஆண்டில் சிறந்த படம் உட்பட எட்டு விருதுகளை வென்றது.
இந்நிலையில், “குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி காந்தியை படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தி.மு.க அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியைச் சாடிள்ளார்.
காந்தியைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகனிடம் ஊடகங்கள் கருத்து கேட்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: “ஒரு பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், நான்கு முறைக்கு மேல் முதலமச்சராக இருந்தவர், அதையும் தாண்டி குஜராத்தைச் சேர்ந்தவர், அங்கேதான் ஆசிரம் இருக்கிறது. அந்த ஆசிரமத்தைப் பார்த்திருக்க மாட்டாரா? காந்தியைத் தெரியாதா? காண்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்பர்க்கவில்லை, குஜராத்தில் ஒரு சாதாராண குக் கிராமத்தில் இருக்கிற விவசாயிகளிடம் கேட்டால்கூட, காந்தியைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால், அவர் படம் வந்துதான் காந்தியைப் பற்றி தெரியும் என்று சொல்வது, காந்தி மீது எவ்வளவு வன்நெஞ்சம் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. அதனுடைய அடையாளம்தான் காந்தி அன்றைக்கு சுடப்பட்டது. ” என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், “தியாகிகளை நாங்கள் மறைத்ததாக ஆளுநர் கூறுகிறார். ஆனால், அதை மறைத்தது அவர்தான். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் காந்தி, நேரு படமில்லை; காந்தி, நேருவை மறைத்த ஆளுநருக்கு இதைப் பற்றி பேச தகுதி இல்லை” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
படம் பார்த்துதான் காந்தியை தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? மோடியை விமர்சித்த துரைமுருகன்!
“குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி காந்தியை படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தி.மு.க அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியைச் சாடிள்ளார்.
Follow Us
பிரதமர் நரேந்திர மோடி ஏ.பி.பி என்ற செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி உலக அளவில் ஒரு குறிப்பிடத்தக்க நபர் என்றும், ஆனால், இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அவரது அங்கீகாரம் குறைவு என்றும் மோடி வலியுறுத்தினார். கடந்த 75 ஆண்டுகளில் காந்தியின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்துவது தேசத்தின் கடமையல்லவா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “மகாத்மா காந்தி உலகில் ஒரு சிறந்த ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகுக்குத் தெரிவிக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள், ஆனால், அவரைப் பற்றி உலகில் முதன்முதலில் ஆர்வம் ஏற்பட்டது ‘காந்தி’ படம் உருவானபோதுதான். நாம் அதை செய்யவில்லை.” என்று கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒரு பிரதமர், மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்கும் தெரியாது, காந்தி படம் உருவானபோதுதான், அவரைப் பற்றி உலகத்தில் முதன் முதலில் ஆர்வம் ஏற்பட்டது என்ற பிரதமரின் கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர்.
ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய இந்தியா-யுகே கூட்டுத் தயாரிப்பான ‘காந்தி’ திரைப்படம் நவம்பர் 30, 1982-ல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது, அதே ஆண்டில் சிறந்த படம் உட்பட எட்டு விருதுகளை வென்றது.
இந்நிலையில், “குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி காந்தியை படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தி.மு.க அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியைச் சாடிள்ளார்.
காந்தியைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகனிடம் ஊடகங்கள் கருத்து கேட்டனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: “ஒரு பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், நான்கு முறைக்கு மேல் முதலமச்சராக இருந்தவர், அதையும் தாண்டி குஜராத்தைச் சேர்ந்தவர், அங்கேதான் ஆசிரம் இருக்கிறது. அந்த ஆசிரமத்தைப் பார்த்திருக்க மாட்டாரா? காந்தியைத் தெரியாதா? காண்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்பர்க்கவில்லை, குஜராத்தில் ஒரு சாதாராண குக் கிராமத்தில் இருக்கிற விவசாயிகளிடம் கேட்டால்கூட, காந்தியைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால், அவர் படம் வந்துதான் காந்தியைப் பற்றி தெரியும் என்று சொல்வது, காந்தி மீது எவ்வளவு வன்நெஞ்சம் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. அதனுடைய அடையாளம்தான் காந்தி அன்றைக்கு சுடப்பட்டது. ” என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், “தியாகிகளை நாங்கள் மறைத்ததாக ஆளுநர் கூறுகிறார். ஆனால், அதை மறைத்தது அவர்தான். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் காந்தி, நேரு படமில்லை; காந்தி, நேருவை மறைத்த ஆளுநருக்கு இதைப் பற்றி பேச தகுதி இல்லை” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.