Advertisment

பட்டியலின தலைவர் பதவியேற்பு: அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவதா? துரைமுருகன் கண்டனம்

நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தின் பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்து அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் போல் பரப்புரவை செய்வதா ? என்று அமைச்சர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
துரைமுருகன் கண்டனம்

துரைமுருகன் கண்டனம்

நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தின் பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்து அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் போல் பரப்புரவை செய்வதா ?  என்று அமைச்சர் துரை முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமைச்சர் துரை முருகன் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் 4, 357இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி மட்டும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு காரணமாக பொறுபேற்க இயலாத நிலை இருந்தது.

இதுதொடர்பாக வழக்கில் 7.10.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு  வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குறிய பிரிவை சேர்ந்தவராக இந்த நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.  எனவே சமந்தபட்ட நபர் பொறுப்பேற்க கூடாது என்று குறிப்பிட்டது.

இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சமூகநீதி கொள்கை, பாஜகவையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்கு பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம் தான் ஆளுநர் ரவியை இப்படி பேச காரணமாக்கியுள்ளது.

ஏன் பழங்குடியினருக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் 17 % அளவிற்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டு பதற்றப்பட்டு பேசியிருக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரும்  கொடுமைகளை எதிர்த்து உளுத்துறை அமைச்சரிடம் குரல் கொடுக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஊராட்சியை மட்டும் பற்றி பேசுவதன் உளோநோக்கம் என்ன?

அனைவரும் ஓரிடத்தில் சமத்துவமாய் வாழ சமத்துவபுரங்களை உருவாக்கிய சமூகநீதி மண் இது. இங்கு தமிழ்நாடு பட்டியலின- பழங்குடியின ஆணையத்தை அமைத்து, மாநில அளவிலான கண்காணிப்பு கூட்டங்களை நடத்தி பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கான சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் .

பட்டியலின – பழங்குடியினத்தவர் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுவது 2013- 2020 வரை 7.15 % ஆக இருந்தது. அதை 2021-2023 வரை 9.13 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்த சமூகநீதி அரசு. இந்த விவரங்களும்- வரலாறும் தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் அரசை தொடர்ந்து விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் பேச வேண்டும் எனில் அரசியல் தலைவராக மாறி ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும்.

மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும், அரசு நிர்வாகத்தின் கோப்புகளுக்கும் கையெழுத்திட்டு, அதில் தனது நேரத்தை ஆளுநர் செலவிட வேண்டும் “ என்றும் அவர் கூறியுள்ளார்.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment