திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பா.ம.க.வை கூட்டணிக்கு அழைத்து விழா ஒன்றில் பேசினார். அப்போது, அவருக்கே உரித்தான பாணியில் நீங்கள் எதிர்க்கட்சிக்கு போனால் சும்மா விட மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “திமுக தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் நாடே பாராட்டும் சிறப்பான ஆட்சி நடத்திவருகிறார். இரண்டு ஆண்டுகளில் மக்கள் மத்தியில் இந்த ஆட்சிக்கு மதிப்பு குறையவில்லை.
அந்தத் தலைவரின் கரங்களை வலுப்படுத்த பா.ம.க. நினைக்க வேண்டும். எதிர்க்கட்சி கூடாரத்துக்கு போனால் சும்மா விட மாட்டேன்” என்றார். திமுக கூட்டணியில் தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது.
அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே பா.ம.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் எனப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் துரைமுருகனின் பா.ம.க அழைப்பு அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“