New Update
00:00
/ 00:00
தி.மு.க.,வை அடுத்த நூற்றாண்டுக்கு நடத்திச் செல்கின்ற ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என சேலம் மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
2 ஆவது தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், ”தி.மு.க.,வின் இரண்டாவது மாநாட்டில் நான் கலந்துக் கொண்டேன். ஆனால் இதுவரை இவ்வளவு பெரிய மாநாட்டை நான் பார்த்ததில்லை. தாய் கழகத்தையே மிஞ்சக்கூடிய அளவுக்கு இளைஞரணி முன்னேறியிருப்பதைப் பார்த்து பொதுச்செயலாளராகப் பெருமை கொள்கிறேன். நூற்றாண்டு வயது கொண்ட திராவிட இயக்கத்துக்கு, 50 ஆண்டுக் காலம் கலைஞர் தலைவராக இருந்தார். 50 ஆண்டுக் காலம் இந்த இயக்கத்தை நடத்தினார்.
அதற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இப்போது இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது சொல்கிறேன், இந்த இயக்கத்தை அடுத்த நூற்றாண்டுக்கு நடத்திச் செல்கின்ற ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அப்படிச் சொல்கின்ற உரிமையும் தகுதியும் எனக்கு இருக்கின்றது,” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.