Advertisment

பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை; பழைய ஸ்டூடண்ட்ஸ்னு கலாய்த்த ரஜினிக்கு துரைமுருகன் பதில்

கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கட்சியில் இந்த பழைய ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிப்பது ரொம்ப கடினம்,என்று துரைமுருகனை கலாய்த்துப் பேசிய நிலையில், சினிமாவிலும் பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்று துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth duraimurugan

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு, பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், ரஜினி நகைச்சுவையாகப் பேசியது, தி.மு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனை செமயாக கலாய்ப்பதாக அமைந்துவிட்டது. 

கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கட்சியில் இந்த பழைய ஸ்டூடண்ட்ஸ்களை சமாளிப்பது ரொம்ப கடினம், அதிலும் துரைமுருகன் கருணாநிதி கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் என்று நகைச்சுவையாக கலாய்த்துப் பேசிய நிலையில், சினிமாவிலும் பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்று துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

Advertisment

தி.மு.க-வின் மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் என்னும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இந்து என். ராம் வெளியிட்டுப் பேசினார்கள். 

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு முகவும் நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமகாவும் இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு, பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், ரஜினி நகைச்சுவையாகப் பேசியது, தி.மு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனை செமயாக கலாய்ப்பதாக அமைந்துவிட்டது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், எப்போதும் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், இந்த பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் கடினம். தி.மு.க-வில் பல பழைய மாணவர்கள் ரேங்க் மேல ரேங்க் வாங்கிவிட்டு அப்படியே இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் கலைஞர் எப்படி சமாளித்தது பெரிய விஷயம். அதிலும் துரைமுருகன் என்று ஒரு பழைய ஸ்டூடன்ஸ் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணுலயே விரலைவிட்டு ஆட்டுனவர். அவரிடம் கட்சியில் யாராவது ஒரு விஷயத்தை செய்துவிட்டு, அண்ணே எப்படி இருக்கிறது என்று கருத்து கேட்டால், அப்படியா சந்தோஷம் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார். நல்லா இருக்குது சந்தோஷம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படியெல்லாம் பண்றீங்கனு சொல்றாரா என்று புரிந்துகொள்ளவே முடியாது. இவர்களை எல்லாம் வைத்து சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று ரஜினிகாந்த் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு மேடையில் அமர்ந்திருந்த தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கைத்தட்டி சிரித்து ரசித்தார். ரஜினியின் நகைச்சுவையான இந்த பேச்சால், அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவருமே சிரிப்பலையில் மிதந்தனர். ஆனால், அமைச்சர் துரைமுருகனுக்கு மட்டும் சிரிக்க முடியாமல் தர்ம சங்கடமாகிப் போனது.

வி.சி.க எம்.பி ரவிக்குமார், ரஜினிகாந்த் என்னும் ஆற்றல் மிக்க பேச்சாளர் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். 

ரவிக்குமார் தனது எக்ச் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “ரஜினிகாந்த் என்னும் ஆற்றல் மிக்க பேச்சாளர்! ‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது எல்லோரது மனதையும் தொட்டது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என இன்று அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொவார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதைப் பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட  திரு ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது. இன்று பலருக்கும் அப்படித் தோன்றியிருக்கலாம். பாராட்டுகள் சார்!” என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகனை கலாய்த்ததுதான் பேச்சாக இருந்தது.

இந்நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, “சினிமாவிலும் பல்லுபோன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது” துரைமுருகன் பதிலுக்கு கலாய்த்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment