காவிரியின் வரலாறு தெரியுமா என மத்திய அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
“கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. ஓரணியில் இருப்பவர்கள், காவிரி பிரச்னையை ஏன் நேரில் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாது?” என ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அண்ணாமலை நடைபயணத்தில் விஜய் மக்கள் இயக்கம்? : புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
அந்த அறிக்கையில், " மத்திய இணை அமைச்சருக்கு காவிரி பிரச்சனை குறித்து தெரியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அந்த அறிக்கையில், " காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ளது. இந்த வாரிய கூட்டங்களில் தமிழக நீர்வளத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தொடர்ச்சியாக கலந்து கொண்டு தமிழகத்தின் நீர் தேவைகள் குறித்து கோரிக்கைகள் முன் வைத்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு பிரதமரோ உள்துறை அமைச்சரோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். காவிரி நதிநீர் மத்திய அரசின் கீழ் உள்ள காவிரி மேலாண்மை வாரியத்தில் உள்ளது. இந்த வாரியம் சரிவர செயல்படவில்லை. நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. கடந்த காலங்களிலும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நதிநீர் கிடைத்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் வரலாறு தெரியாமல் பேசியுள்ளார்" என துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“