சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வந்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தங்கத்தேர் இழுத்த துர்கா ஸ்டாலின்

தங்கத்தேர் இழுத்த துர்கா ஸ்டாலின்

ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Advertisment

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

publive-image

இதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் சென்றார். கோவிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்துவிட்டு கோவில் உள்பிரகாரத்தில் தங்க தேர் இழுத்தார். பின்னர் தங்கத் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனையை தொட்டு வணங்கினார்.

Advertisment
Advertisements
publive-image

இதனைத் தொடர்ந்து 51 சுமங்கலி பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்தை வணங்கிய அவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

publive-image

இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் கல்யாணி கோவில் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி கோவில்களில் வழிபாடு நடத்த வந்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: