முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு 32 சவரன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தெய்வ பக்தி மிக்கவர். கோயில்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் பிடிப்பு கொண்டவர்களாலும் எதிர்க்கட்சியினராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு சர்சையாகி வந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் 32 சவரன் தங்க கிரீடத்தைக் வியாழக்கிழமை காணிக்கையாக வழங்கினார்.
கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள குருவாயூர் கோயில் தென்னிந்தியாவின் ‘துவாரகா’ என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலுக்கு கேரளம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகலில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், குருவாயூர் கோயிலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கியுள்ள 32 சவரன் தங்க கிரீடத்தின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"