முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என 2 சகோதரிகளும், ராஜமூர்த்தி என ஒரு சகோதரரும் உள்ளனர். இதில் சாருமதி சென்னையில் வசித்து வந்தார். துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வார். அவ்வாறு செல்லும் போதும், தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரை அழைத்து செல்வாராம். உடன் பிறந்தவர்கள் மீது துர்கா ஸ்டாலின் எப்போதும் பாசமாக இருப்பார். இந்தநிலையில், சாருமதி மறைவு அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாருமதி உடலுக்கு நேற்று (பிப்ரவரி 5) மாலை சென்னையில் உள்ள அவரது எழும்பூர் இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதையடுத்து உறவினரான சாருமதி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/