திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் துர்கா ஸ்டாலின்!

ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் அபிஷேக சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினாா்.

Durga Stalin Visits Tirupati: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று திருமலையில் ஏழுமலையானை தரிசித்தார். திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி கடவுள் பக்தி கொண்டவர் என்பது பல வழிகளில் நமக்கு தெரிய வந்திருக்கிறது. அடிக்கடி கோயில்களுக்கு சென்று தரிசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர்.

இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க கடந்த வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார் துர்கா ஸ்டாலின். பின், அங்கேயே இரவு தங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை கோயிலுக்குச் சென்று ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் அபிஷேக சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினாா்.

வழிபாட்டிற்குப் பின்னா், துர்கா ஸ்டாலினுக்கும் அவருடன் வந்திருந்த மற்றவா்களுக்கும் கோயிலில் உள்ள ரங்க நாயகா் மண்டபத்தில் தீா்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து துா்கா ஸ்டாலினுக்கு ஏழுமலையானுக்கு சமா்ப்பிக்கப்பட்ட அஸ்திரத்தை கோயில் அா்ச்சகா்கள் ஏழுமலையான் ஆசியுடன் வழங்கினா்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close