குருவாயூர் கோயிலில் துர்கா ஸ்டாலின்: எடைக்கு எடை துலாபாரம்
துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயில் மணிக்கிணற்றில் இருந்து தீர்த்தமும் துலாபாரம் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூர் கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயிலின் மணிக்கிணற்றில் உள்ள தீர்த்தமும் துலாபாரமாக நேர்த்திக்கடன் செலுத்தினார்.
Advertisment
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.
பெரியார் வழியில் கடவுள் மறுப்பு கொள்கைகொண்ட திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் திராவிட இயக்க குடும்பத்தைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது எதிர்க்கட்சிகளாலும், திராவிட இயக்க விமர்சகர்களாலும் தீவிர திராவிட இயக்க கொள்கையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. துர்கா ஸ்டாலின் இந்த விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கோயில்களில் வழிபாடு செய்து வருகிறார்.
Advertisment
Advertisement
இந்த நிலையில், கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் துர்கா ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். அதோடு, துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலில் தனது எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயில் மணிக்கிணற்றில் இருந்து தீர்த்தமும் துலாபாரம் நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளார்.
குருவாயூர் கோயிலுக்கு டிசம்பர் 13ம் தேதி மாலையில் தீபாராதனை நேரத்தில் சென்ற துர்கா ஸ்டாலினை கோயில் தேவசம்போர்டு சேர்மன் மோகன் தாஸ், நிர்வாக குழு உறுப்பினர் கே.வி.ஷாஜி ஆகியோர் வரவேற்றுள்ளனர். துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வணங்கியுள்ளார்.
இதையடுத்து, துர்கா ஸ்டாலின் பெயரில் கோயிலைச் சுற்றியுள்ள 'சுற்று விளக்கு'களில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக குருவாயூர் கோயிலுக்கு 40,000 ரூபாய் ஏற்கெனவே செலுத்தி ரசீது பெறப்பட்டுள்ளது. சுற்று விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக் கடன் செலுத்தினார். துர்கா ஸ்டாலின் தனது எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயிலின் மணிக்கிணற்றில் உள்ள தீர்த்தமும் துலாபாரம் நேர்த்திக் கடனாக செலுத்தினார். இதற்காக, துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயில் கவுண்டரில் ரூ.9,200 செலுத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை சர்க்கரை தீர்த்தம் துலாபாரம் செலுத்தி வழிபாடு செய்ததை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலரும் வியந்து பார்த்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”