scorecardresearch

தங்கை உடலை பார்த்து கதறி அழுத துர்கா ஸ்டாலின்.. கண் கலங்கிய உதயநிதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்காவின் மூத்த அக்கா சாருமதி உடல்நலக் குறைவு காரணமாக மரணித்தார். அவரது உடலை பார்த்து துர்கா ஸ்டாலின் கதறி அழுதார்.

Durga Stalins elder sister charumathi dies in chennai
துர்கா ஸ்டாலின் மூத்த சகோதரி சாரு மதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி சாருமதி ஆவார். இவர், கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் திமுக கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தனது சகோதரி உடலை பார்த்ததும் துர்கா ஸ்டாலின் கண்கள் கலங்கி அழுதார்.
அவருடன் வந்திருந்த உதயநிதியும் கண்கலங்கினார். சாருமதிக்கு அஞ்சலி செலுத்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வந்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durga stalins elder sister dies

Best of Express