Kaveri river's quality has been increased says CPCB : கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் மாசுக்கள் குறைய துவங்கியது. கழிவுகள் மற்றும் மாசுகள் குறைந்ததால் காற்று மற்றும் நீர்நிலைகள் தங்களின் இயல்பு நிலையை எட்டியது.
ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தமிழகம் மற்றும் கர்நாடக்காவில் காவிரி ஆறு பாயும் 42 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு காலத்தின் போது 33 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஊரடங்கின் போது ஆற்று நீரில் பி.எச்., டி.ஒ, மற்றும் பி.ஒ.டி. ஆகியவற்றின் அளவுகள், ஆற்றில் குளிப்பதற்கு இந்திய அரசு அனுமதிக்கும் அளவுகளுடன் ஒத்துருந்தது.
இதன் மூலம் நீரின் தரமானது ஊரடங்கு காலத்தில் உயர்ந்துள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மட்டுமில்லாமல், இந்த காலத்தில் பிரம்மபுத்திரா, மகாநதி, சட்லஜ், கிருஷ்ணா, நர்மதா, பெண்ணாறு உள்ளிட்ட 19 முக்கிய நதிகளில் நதி நீரின் மாசு தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ச்சி செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil