விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் லலிதாம்பிகை. இவர் தனது வீட்டில் உள்ள மின் இணைப்பை மாற்றியமைக்க விருதுநகர் வடக்கு மின் நிலையத்தை அணுகி உள்ளார். அப்போது அந்த மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளரான மாடக்குமார் மின் இணைப்பை மாற்றித்தர ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த புகார்தாரர் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகி உள்ளார். அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதவி மின் பொறியாளரிடம் மாடகுமாரிடம் கொடுத்தார். உதவி பொறியாளர் அதை பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.