அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 14 இடங்கள், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முறைகேடாக சேர்ந்த பணத்தை பெருமளவை கிரிப்டோகரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடந்துவரும் நிலையில், ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil