அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா என்ற சத்யநாராயணன் அ.தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மற்றும் உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிடம் கட்டியதாக ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக சத்யா மீது புகார் அளிக்கப்பட்டது. மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புதிதாக கட்டடமே கட்டாமல் ஏற்கனவே இருந்த கட்டடத்தை சீரமைத்துவிட்டு புதிதாக கட்டியதுபோல் கணக்கு காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது எம்.எல்.ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“