/tamil-ie/media/media_files/uploads/2021/10/Vijaya-baskar.jpg)
former Minister C. Vijayabaskar : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். உதவியாளர் சரவணனின் சென்னை நந்தனம் வீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சரவணன் வீடு மட்டுமின்றி முருகன், டாக்டர் செல்வராஜ் ஆகியோரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தி.நகர் பங்களா, காஞ்சிபுரம் விவசாய பண்ணை, 14 கல்வி நிறுவனங்கள்… விஜயபாஸ்கர் மீதான எஃப்.ஐ.ஆர் இதுதான்!
திங்கள் கிழமை அன்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இதர 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ரூ. 23 லட்சம் ரொக்கப்பணமும், 4.87 கிலோ தங்மும், 136 வாகனங்களுக்கான ஆவணங்கள் அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். திமுக ஆட்சியில் இதுவரை நான்கு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18ம் தேதி அன்று இந்த இடங்களில் சோதனை நடத்த போதுமான ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தாலும், வீடு பூட்டப்பட்டிருந்ததாலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அந்த வீடுகள் மற்றும் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பூட்டை உடைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.