Advertisment

விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கிய மாஜி அமைச்சர் காமராஜ்: 49 இடங்களில் சோதனை

Anti-Corruption officials booked a case against Ex food minister Kamaraj for amassing wealth of about Rs 58 crore Tamil News: முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவருக்கு சொந்தமான 49 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
DVAC Raids Ex minister Kamaraj Premises and his Associates properties In 49 places

DVAC raid premises of ex-TN Minister Kamaraj and his Associates Tamil News

 Former AIADMK minister Kamaraj  Tamil News: கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்ததாகவும், அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசயா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 752 ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவினர் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜூன் வீட்டிலும், அவருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் ஆகிய நகரங்களில் உள்ள 49 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

publive-image

முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யயப்பட்டது. மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது.

இந்த விரிவான விசாரணையின் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், 3) Dr.K.இன்பன், 4) திரு.R.சந்திரசேகரன் 5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்துள்ளது.

publive-image

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடத்தி வரும் நிலையில் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Aiadmk Admk Tamilnadu News Update Dvac Raid Tamilnadu News Latest Minister Kamaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment