former AIADMK minister SP Velumani : ஒப்பந்தப்பணி தருவதாக கூறி ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நேற்று சென்னை காவல் ஆணையரிடம் ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்ததார். இந்நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய, சென்னை, திண்டுக்கல், கோவை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் அவருடைய வீட்டிற்கு முன்பு நூற்றுக் கணக்கான அஇஅதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் 10 முதல் 15 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அஇஅதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவருடைய சகோதரர் அன்பரசன், நண்பர்கள் சந்திர பிரகாஷ், சந்திர சேகர் ஆகியோர் உட்பட 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் செய்ததாக புகார் வைக்கப்பட்ட நிலையில் செந்தில் அண்ட் கோ, கே.சி.பி. என்ஜினியர்ஸ், சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் மேலும் சில நிறுவனங்களின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்றிட இந்த இணைப்பில் இணைந்திஉங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil