தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

2014 - 2020 வரையில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் ரூ. 3.78 கோடி சொத்துகளை குவித்ததாக புகார் எழுந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

2014 - 2020 வரையில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் ரூ. 3.78 கோடி சொத்துகளை குவித்ததாக புகார் எழுந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DVAC raids,TN apex cooperative bank Chairman Elangovan, Praveen premises, chennai, trichy

TN apex cooperative bank Chairman Elangovan : தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்று கூறப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இவர் உள்ளார். இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் ப்ரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

முதல் தகவல் அறிக்கை நகல்

இளங்கோவன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

publive-image
Advertisment
Advertisements

இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை

2014 - 2020 வரையில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் ரூ. 3.78 கோடி சொத்துகளை குவித்ததாக புகார் எழுந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கரூர் லாலாபேட்டையில் உள்ள 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் இளங்கோவனின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த ராஜ் நாராயணன் என்பவர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: