/indian-express-tamil/media/media_files/2025/04/29/GwEc9CFLwmzouxcppSo3.jpg)
உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் 50 ஏக்கர் பரப்பளவில் மெரினா நீலக்கொடி கடற்கரை!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மே மாதத்தின் 3வது வாரத்தில், மெரினா ப்ளூபிளாக் (Blue Flag) கடற்கரையை திறந்து வைக்க இருக்கிறார். 50 ஏக்கர் பரப்பளவில், இந்த கடற்கரை புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
மெரினா கடற்கரையில், சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அனைத்தும் தயாராகி விட்டது. மேலும் கழிவறைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்கள், குளியல் அறைகள் கட்டும் பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையும், என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமாரகுருபரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தண்ணீர் மாதிரிகள் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. கடற்கரை, வரலாறு, இதர விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகளை சென்னை பெருநகர மாநகராட்சி அமைக்கிறது. இந்த கடற்கரைக்கு வர கட்டணம் எதுவும் கிடையாது. டெண்டர் நிபந்தனைகளில் இருந்த தடைகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது,. கடற்கரையில் எந்த தடையும் இருக்காது. கடற்கரையை பராமரிக்க ஒரு கான்ட்ராக்டரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். 3 வருடத்திற்க்கு 6 கோடி ரூபாய் செலவாகும். சுமார் 12 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்வார்கள். இந்த செலவை சென்னை பெருநகர மாநகராட்சியே ஏற்கும்.
ராயபுரம் மண்டலத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும் Urbaser Sumeet நிறுவனத்துக்கு, இந்த ப்ளூ ஃபிளாக் கடற்கரையை பராமரிக்கும் கூடுதல் பொறுப்பு கொடுக்க இருக்கிறார்கள். "மெரினாவில் 250 ஏக்கரில் மற்றொரு ப்ளூ ஃபிளாக் கடற்கரையை உருவாக்கவும் திட்டம் இருக்கிறது" என்று கமிஷனர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.