/indian-express-tamil/media/media_files/2025/10/09/udhayanidhi-stalin-3-2025-10-09-14-12-28.jpg)
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என கூட்டணியில் உள்ள பழைய கட்சியான அ.தி.மு.க-வின் துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பா.ஜ.க தேடிக் கொண்டிருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவித்த பணிகள் எல்லாம் நடக்கிறதா? எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது? எந்த பணிகள் முடிவடைந்துள்ளது என ஆய்வு செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/09/dindigul-udhay-7-2025-10-09-14-18-01.jpeg)
பல்வேறு திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதனை எப்படி விரிவுப்படுத்த வேண்டும் என்று நானும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஆலோசனை செய்து அதில் சில பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம். அதனை செயல்படுத்துவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவை முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். இந்தப் பணிகளை விரைவுப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.
இதையடுத்து பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்திய பா.ஜ.க அரசு தி.மு.கவை வீழ்த்த பல்வேறு திட்டங்களை தீட்டுகிறது. அதையெல்லாம் தாண்டி சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என கூட்டணியில் உள்ள பழைய கட்சியான அ.தி.மு.கவின் துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பா.ஜ.க தேடிக் கொண்டிருக்கிறது. எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.
பூத் கமிட்டியினர் தான் தி.மு.க-வின் ‘ஸ்டெதாஸ் கோப்’ போன்றவர்கள். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து மக்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க-வை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.