Advertisment

இளவரசன் மரணம் : இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளும் தற்கொலை தான் என்று கூறுகிறது

சரியாக பகல் 1.20 மணிக்கு வரும் குர்லா எக்ஸ்பிரஸ் வண்டியின் முன்பு பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
E. Elavarasan Suicide Justice SR Singaravelu Inquiry Commission reports

E. Elavarasan Suicide Justice SR Singaravelu Inquiry Commission reports

E. Elavarasan Suicide Justice SR Singaravelu Inquiry Commission reports : இளவரசன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக எழுப்பட்ட்ட புகார்களைத் தொடர்ந்து நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா.

Advertisment

இளவரசன் திவ்யா என்ற பெண்ணை காதலித்து மணம் முடித்தார். இளவரசன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் திவ்யாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பின்பு தர்ம்புரியில் பல்வேறு இடங்களில் தேவையில்லாத பதட்டமான சூழல் உருவானது.

இந்நிலையில் இளவரசன் ஜூலை 4ம் தேதி, 2013ம் வருடம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கினை விசாரணை செய்து வந்தார் நீதிபதி சிங்காரவேலு. இந்த விசாரணையின் முடிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, 2018 அன்றே சமர்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் மக்களுக்கு வெள்ளிக்கிழமையன்று வெளியானது.

அந்த அறிக்கையில், இளவரசன் தன் மனைவி திவ்யா தன்னைவிட்டு விலகிச் சென்ற விரக்தியின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அறிவித்துள்ளது. என் பெற்றோர்களிடமே திரும்புகின்றேன் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யா கூறிய சில தினங்களிலேயே இவரின் தற்கொலை நடந்துள்ளடது.

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடலில் இரண்டு முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஒன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் அம்மருத்துவக்குழுவால் நடத்தப்பட்டது. மற்றொன்று டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழுவால் நடத்தப்பட்டது. இரு முடிவுகளும் தற்கொலையால் ஏற்பட்ட காயங்கள் மட்டுமே இளவரசனின் உடலில் இருந்தது என்றும், இறப்பதற்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் என்று எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொள்ளும் போது மது குடித்திருந்ததாகவும் அந்த அறிக்கை அறிவித்துள்ளது. ஆனால் எதிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இளவரசன் மரணிக்கும் முன்பு எழுதி வைத்த 4 பக்க கடிதத்தினை அவரின் கையெழுத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டு கையெழுத்துகளும் ஒத்துப்போனதையும் அறிக்கையில் சமர்பித்திருக்கின்றனர்.

அவரின் கடிதத்தில் என் இறப்பிற்கு யாரும் காரணமில்லை. என் முடிவு தான் இது. எனது ஆசையெல்லாம் நான் இறந்த பின்பு திவ்யா வந்து என்னை பார்க்க வேண்டும் என்பதே. அவள் வந்தால், அவளை யாரும் திட்ட வேண்டாம். என்னால் அவள் கஷ்டப்பட வேண்டாம். அவள் சந்தோசமான ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

சென்னையில் இருந்து திரும்பி வந்த அவர் மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார். சரியாக பகல் 1.20 மணிக்கு வரும் குர்லா எக்ஸ்பிரஸ் வண்டியின் முன்பு பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க : உடுமலை ஆணவக் கொலை: மறுமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்கிய கௌசல்யா

Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment