Nilgiris | நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இந்த இரண்டு மலை வாசஸ்தலங்களுக்குள் நுழைய விரும்பும் அனைத்து வாகனங்களும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், காட் சாலைகளுக்குள் நுழையும் வாகனங்கள், இந்த வாகனங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இந்த பார்வையாளர்கள் தங்கியிருக்கும் காலம் என பல்வேறு தகவல்கள் திரட்டப்படும்.
இந்த தகவலை ஐஐஎம் (பி) மற்றும் ஐஐடி (மெட்ராஸ்) பேராசிரியர் உட்பட வல்லுநர்கள் குழு பயன்படுத்தி, காட் சாலைகளுக்கான சுமந்து செல்லும் திறனை சரிசெய்யும்.
இருப்பினும், உள்ளூர்வாசிகள் இந்த இ-பாஸ்களைப் பெறத் தேவையில்லை.
இதற்கிடையில், இ பாஸ் பெறுவதற்கான விதிமுறைகள் வெளியாகின. அதில், வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இ-பாஸ் பெறலாம்.
இந்த இ-பாஸ் பெற வாகனத்தின் அசல் பதிவுச் சான்று, காப்புச் சான்று, புகைப்பட சான்று அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“