வியாழன் முதல் அடுத்த மாவட்டத்தில் நுழைய இ- பாஸ் கட்டாயம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்தை ஏற்று ஜூன் 25 முதல் ஜூன் 30 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ்…

By: Updated: June 24, 2020, 07:48:14 PM

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்தை ஏற்று ஜூன் 25 முதல் ஜூன் 30 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்திருப்பதாவது: “தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை மார்ச் 25 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், ஜூன் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க ஜூன் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் ஜூன் 24ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30 நள்ளிரவு 12.00 மணி வரை 7 நாட்களுக்கு முழு
ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில்
வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் ஜூன் 27 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்கள், தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல (Zonal) முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகனப் போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்திற்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற
மாவட்டங்களிலிருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்தக் கருத்து ஏற்கப்பட்டு, வரும் ஜூன் 25 முதல் ஜூன் வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். கொரோனா நோய் பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க அரசுடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதல்வர் பழனிசாமி அறித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:E pass needed to enter other districtscm edappadi k palaniswami announcement coronaviurs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X