E pass new rules : திருவள்ளூர் மாவட்டத்திற்குள் வேலைக்கு வரும் சென்னைவாசிகள் இபாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisment
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, பொது போக்குவரத்து, எட்டு மண்டலங்களாக பிரித்து, கண்காணிக்கப்படுகிறது. மண்டலம் விட்டு மண்டலம் பயணிக்க, இ - பாஸ் இருந்தால் மட்டும், நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி கிடைக்கிறது.இந்நிலையில், சென்னை மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், வேலைக்காக சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தினசரி வேலைக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வேலைக்காக வருபவர்களை அவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னர், உள்ளே நுழைய அனுமதித்தனர்.
இப்போது இந்த நடைமுறைக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மகேஸ்வரி ரவிக்குமார் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ சென்னையில் இருந்து வருபவர்கள் இனி இ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisment
Advertisements
மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தொலைவில் வசிப்பவர்கள் பாஸ் பெற்று தங்கள் பணியிடத்திற்கு அருகில் தங்கலாம். சென்னையிலிருந்து தினமும் பயணம் செய்வது ஊக்குவிக்கப்படாது ” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், மாவட்ட எல்லையில் இ-பாஸ்கள் சோதனை செய்வதையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து செல்லும் மக்கள் இ பாஸ் இல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசு குறிப்பிட்டுள்ள 8 மண்டலங்களில் மண்டலம் விட்டு மண்டலம் நுழைய இ-பாஸ் கட்டாயமாகும். சென்னையில் இருந்து பலர் தினசரி செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர். இன்னால் வரை அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்,பலர் அதை தவறாகப் பயன்படுத்துவதையும் தேவையின்றி சுற்றித் திரிவதையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
வரும் நாட்களில் இந்த இபாஸ் சோதனை மேலும், கட்டாயம் ஆக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மாவட்ட எல்லையில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, இபாஸ் உள்ளவ்ர்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால், இபாஸ் பெறாதவர்கள் கட்டாயம் உள்ளே அனுமதிக்கபட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி மாற்றத்தால் சென்னைவாசிகள் அண்டை மாவட்டங்களுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் வேலை பறிப்போய் விடும் அபாயம் இருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil