சென்னைக்குள் விமானம் வழியாக நுழைய திட்டமா? இ-பாஸ், தனிமைப்படுத்தல் இனி கட்டாயம்

ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 3,500 பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாலும், வந்திறங்கும் போது, வைரஸ் அறிகுறியில்லாமல் காணப்பட்டாலும் கூட, இனி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.  சென்னைக்கும் நுழைய விரும்பும் அனைத்து விமான பயணிகளும் தமிழ்நாடு இ-பாஸுக்கு https://tnepass.tnega.org/#/user/pass தளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். “எடுத்துக்காட்டாக, வேலூர் அல்லது திருவண்ணாமலை செல்ல வேண்டுவோர், சென்னையில் இறங்கிய […]

chennai airport, e-pass chennai airport, lock down in chennai, சென்னை ஏர்போர்ட், சென்னை விமான நிலையம், சென்னை ஊரடங்கு
chennai airport, e-pass chennai airport, lock down in chennai, சென்னை ஏர்போர்ட், சென்னை விமான நிலையம், சென்னை ஊரடங்கு

ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 3,500 பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என்றாலும், வந்திறங்கும் போது, வைரஸ் அறிகுறியில்லாமல் காணப்பட்டாலும் கூட, இனி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.


சென்னைக்கும் நுழைய விரும்பும் அனைத்து விமான பயணிகளும் தமிழ்நாடு இ-பாஸுக்கு https://tnepass.tnega.org/#/user/pass தளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். “எடுத்துக்காட்டாக, வேலூர் அல்லது திருவண்ணாமலை செல்ல வேண்டுவோர், சென்னையில் இறங்கிய பிறகு, அவர்கள் தங்களது இ-பாஸ் விண்ணப்பத்தில் இறுதி இலக்கைக் குறிப்பிட வேண்டும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

கொரோனா ஊரடங்கு… லண்டன் கப்பலில் மாட்டிக் கொண்ட தமிழக ஊழியர் மாரடைப்பில் மரணம்!

இருப்பினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒருவர் இ-பாஸ் எடுக்காவிட்டாலும், அவர்கள் விமான நிலையத்தில் பயணிகள் வருகை அறைக்கு அருகில் மாநில அரசு அமைத்துள்ள கவுண்டர்களில் இ-பாஸ் பெறலாம். “அப்போதுதான் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் ஒவ்வொருவரிடமும் தீவிரமாக சோதிக்கப்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

உள்நாட்டு விமானம் மூலம், மற்ற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் கட்டாய வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். “அவர்கள் அறிகுறியற்றவராக இருந்தாலும், 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள். இருப்பினும், அவர்களுக்கு சென்னையில் வீடு இல்லையென்றால், ஒரு institutional quarantine மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், இ-பாஸ் பெற்ற பிறகு பயணிக்க முடியும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்தில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆனால் இந்த செயல்முறை விமான நிலையத்தில் இன்னும் தொடங்கப்படவில்லை என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை லாக்டவுன் விதிமுறைகளில் அரசு அறிவித்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம்

வந்தே பாரத் மிஷன் விமானங்கள் மூலம், இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும், கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் institutional quarantineல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். Institutional quarantine என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வசதி அல்லது நகரத்தில் உள்ள ஏதாவது ஒரு ஹோட்டலில், பயணிகளே அவர்களது சொந்த செலவில் தனிமைப்படுத்திக் கொள்ளுதலாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: E pass quarantine mandatory for those flying into chennai corona virus

Next Story
கொரோனா ஊரடங்கு… லண்டன் கப்பலில் மாட்டிக் கொண்ட தமிழக ஊழியர் மாரடைப்பில் மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express