/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-16T130622.018.jpg)
E V Ramasamy Periyar's 142nd birthday Kamal Haasan tweet : பெரியாரின் 142வது பிறந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ”பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்” என்று பெரியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கமல் ஹாசன்.
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்!
புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்!
"பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2020
அவர் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளையும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “சமூக நீதிக்காக பாடுபட்டவர் பெரியார். அவருடைய பிறந்த நாள் அன்று வாழ்த்துகள் கூறுவதில் தயக்கம் ஏதும் இல்லை” என்று அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us