இந்திய பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை (இன்று) நண்பகல் 12.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இலங்கையிலும் உணரப்பட்டது. இலங்கையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இலங்கை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“