வங்க கடல் நிலநடுக்கத்தால், சென்னையில் நில அதிர்வு; பொதுமக்கள் பீதி

Earthquake in Bay of Bengal sends tremors across Tamil Nadu, Chennai: வங்க கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சென்னையில் லேசான நில அதிர்வு; பொதுமக்கள் பீதி

வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வங்க கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான நிலையில், சென்னையில், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது காக்கிநாடாவில் இருந்து 296 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில், வங்க கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு தொடர்பான தகவலால் சென்னை மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Earthquake in bay of bengal sends tremors across tamil nadu chennai

Next Story
கே.டி.ராகவனை உடனே கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபியிடம் புகார்Jothimani MP lodged complaint against KT Ragavan, பாஜக, கேடி ராகவனை உடனே கைது செய்ய வேண்டும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிஜிபியிடம் புகார், congress mp jothimani, dgp, congress, bjp, kt ragavan sex scandal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com