earthquake in chennai : சென்னையில் நேற்று காலை சுமார் 4.5 ரிக்டர் அளவில் பதிவாக நிலநடுக்கத்தின் தாக்கம் கன்னியாகுமரி வரை எதிரொலித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக சிலர் சமூக தளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த அதிர்வு உண்மை தான் என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. இதன் தாக்கம் கன்னியாகுமரி கடல் வரை எதிரொலித்தது.

நேற்று காலை 7:05 மணியளவில் நில அதிர்வை உணர்ந்ததாக சிலர் பதிவிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். வெறும் 2-3 நொடிகள் மட்டும் லேசான அதிர்வை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து தற்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டது. இதனாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு செய்தி வெளியானதில் இருந்து, சென்னையைத் தாண்டி வெளியூர்களில் வசிக்கும் பலரும், இச்சம்பவம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சென்னையில் வசிக்கும் தங்கள் உறவினர்களிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், "இன்று காலை 7:02 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதற்காக எந்த சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
