ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கி விட்டது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்து எழுந்து வரும் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வழிபடுவர். இந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிலுவை பாதை வழிபாடு செய்யப்படும்.
சில நேரங்களில் இயேசு கிறிஸ்து வாழ்வின் இறுதிக்கட்டமான சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் கோவை ஒண்டிப்புதுார் புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று சிலுவை பாதை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசுவின் இறுதிக்கட்ட பாதை, சிலுவை மரணம், உயிர்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை தத்ரூபமாக கலைஞர் நடித்து காட்டினர். ‘அவர் உயிரோடிருக்கிறார்’ என்ற தலைப்பில் நாடகம் அரங்கேறியது. இந்த நாடகத்தை, ‘பேஷன் பிளே இந்தியா’ அமைப்பு சார்பில் முதல் முறையாக கோவையில் நடைபெற்றது. 50 கலைஞர்கள் மற்றும் ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்த 30 பேர் இதில் நடித்து அசத்தினர். சிறப்பான ஒலி, ஒளி அமைப்புகளுடன் அரங்கேறிய நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“