உளவுத்துறைக்கு புதிய ஐஜி நியமனம் - தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக பணியாற்றிவந்த சத்தியமூர்த்தி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசு புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment
தமிழக காவல்துறை உளவுத்துறை ஐஜியாக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி இந்த மாதம் பணி ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் மாநில உளவுப்பிரிவு பதவி மிகவும் முக்கியமான பதவியாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் நடைபெறும் அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள், ஆட்சி மீதான மக்களின் கருத்து என அனைத்தையும் உளவுத்துறைதான் தமிழக அரசுக்கு ரிப்போர்ட் அளித்து வருகிறது. அதனால், தமிழக உளவுத்துறை ஐஜி பதவி என்பது மிகவும் முக்கியமான பதவியாகக் கருதப்படுகிறது
Advertisment
Advertisements
தற்போது தமிழக காவல்துறையில் உளவுப்பிரிவு ஐஜியாக இருக்கும் சத்தியமூர்த்தியின் பணி காலம் இன்று நிறைவடைவதால் அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உளவுப்பிரிவுக்கு ஈஸ்வரமூர்த்தி புதிய ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈஸ்வர மூர்த்தி தற்போது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"