சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று, ட்ரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் பல பைக்குகள் மற்றும் கார் எரிந்து நாசமானது.
தாம்பரம் அருகே கடப்பேரி தாமஸ் தெருவில் 18 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று ட்ரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மற்றும் கார் தீப்பிடித்து எரிந்தது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெளிப்புற பகுதி பாதிக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பீதியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததையடுத்து, தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil