தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. வங்க தேசம், அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் வாக்கெடுப்பு தயாரிப்பு பணிகளை முடித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 26-ம் தேதிக்கு பிறகு தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் வாக்கெடுப்பு தயாரிப்பு பணிகளை துவங்க உள்ளது. அதோடு 11வது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளது. மற்றும் தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையம் இளம் வாக்காளர்களுக்கு பொது வெளியிலும், இணைய பக்கங்கள் மூலமாகவும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. அதோடு தேர்தலில் வாக்காளர்கள் எப்படி தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும் என்பதற்கான மாதிரி தேர்தல்களையும் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 11 வது தேசிய வாக்காளர் தினத்தன்று, வாக்காளர்கள் தேர்தலில் தங்களின் முழு பங்கேற்பை தருவதற்காவும், இளம் வாக்காளர்கள் தேர்தலில் எப்படி தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்திய தேர்தல் ஆணைக்குழுவின் முழு கண்காணிப்பிலும் மற்றும் முழு கட்டுப்பாட்டிலும் நடத்தப்பட உள்ள இந்த தேர்தல்கள், பன்முகத்தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil