சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் நிலையில், சுமார் 4,500 ஏக்கர் நிலை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவதாக அமைய உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
இந்த விமான நிலையம் கட்டுவதற்கு அரசின் புறம்போக்கு நிலங்கள் என 2,000 ஏக்கர் தவிர்த்து பார்த்தால், விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பாதிப்படையும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் நிலம் கையகப்படுத்துதல் குறித்து பன்னிரண்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil