Economically backward upper castes 10% reservation : 2018ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரில் அதி தீவிரமாக விவாதங்கள் உருவாக்கியது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு அளிக்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு. பெரும் கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10% இடஒதுக்கீடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திமுக சார்பில், அக்கட்சியின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்!