10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது… உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ்.பாரதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு என குற்றச்சாட்டு

By: Updated: January 18, 2019, 11:44:30 AM

Economically backward upper castes 10% reservation : 2018ம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடரில் அதி தீவிரமாக விவாதங்கள் உருவாக்கியது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு அளிக்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு.  பெரும் கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10% இடஒதுக்கீடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திமுக சார்பில், அக்கட்சியின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இப்படியானதொரு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு.. வரும் கல்வியாண்டில் அமல்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Economically backward upper castes 10 reservation dmk leader rs bharathi moved a petition against reservation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X