Advertisment

"காரில் பெண்களை துரத்திய சம்பவம் - கைதானவர்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை": காவல்துறை தகவல்

ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் பின்புலம் எதுவும் இல்லை என பள்ளிகரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தகவல் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ECR Incident

ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில்,  பள்ளிகரணை துணை ஆணையர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்த சம்பவம் அதிகாலை சுமார் 3 மணிக்கு நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தில் 7 பேர் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் தொடர்புடைய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Advertisment
Advertisement

பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டதாக புலன் விசாரணையில் இதுவரை தகவல்கள் கிடைக்கப்படவில்லை. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் இல்லை. காரில் கட்சி கொடி இருந்ததை அனைவரும் பார்த்தனர். ஆனால், டோல்கேட்டுகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களில் பயன்படுத்துவதற்காகவே கட்சி கொடியை காரில் பொருத்தியுள்ளனர். அவர்களுக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்பு இருப்பது போன்று புலன் விசாரணையில் தெரிய வரவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் இங்கே செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஒருவர் வெளிமாநிலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். மற்றொரு நபர் பணியாற்றி வருகிறார். இதில் சந்துரு என்ற நபர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்த உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

Tamilnadu chennai Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment