திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சீனா என பல்வேறு வெளிநாடுகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாக மிரட்டி பணம் பறித்ததாக சீனாவை சேர்ந்த யுவான்லூன் (25), ஷியோ யமாவ் (40) ஆகியோரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சீன வாலிபர்களிடம், டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் தேவேந்திர குமார், கவுரவ் சிங் இருவரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன் விசாரணை மேற்கொண்டனர். சீனாவை சேர்ந்த அந்த 2 பேரையும் தனியாக ஒரு அறையில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இறுதியில் அவர்களை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“